தூத்துக்குடியில் வ.உ.சி கல்லூரி சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் வஉசி கல்லூரி சார்பில் தூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவியர் களுக்கு மினி மாரத்தான் 09.10.2021 இன்று சனிக்கிழமை காலை கல்லூரி முன்பு தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சி.வீரபாகு வரவேற்புரை யாற்றினார். அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மினி மாரத்தான் போட்டியை கனிமொழி எம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரி செயலர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.