தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியடிகளின் 153-வது பிறந்த நாளை முன்னிட்டும், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு, மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்ஆர் கனகராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் இரத்தின முரளி, மாவட்ட பொது செயலாளர் விஎஸ்ஆர் பிரபு, மாவட்ட பொருளாளர் சண்முக சுந்தரம், மாநில பொது குழு உறுப்பினர் இசக்கி முத்து, கிழக்கு மண்டல தலைவர் சந்தனகுமார், தெற்கு மண்டல தலைவர் முத்துகிருஷ்ணன், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மான்சிங் மற்றும் மாநில, மாவட்ட மண்டல நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.