• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி: 2பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து திருட முயன்ற 2பேரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

தூத்துக்குடி மட்டக்கடை பஜார் தச்சர் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம் இரவு ஷட்டர்களை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வந்துபார்த்த போது, 2பேர் பூட்டை உடைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரை யும் பிடித்து வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

போலீசார் விசாரணை நடத்தி கடையை உடைத்து திருட முயன்றதாக தூத்துக்குடி முத்து நாயக்கர் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சங்கர் கணேஷ் (34), தச்சர் தெருவைச் சேர்ந்த சகாயராஜ் மகன் ஸ்டீபன் ராஜ் (19) ஆகிய 2பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர் திரேஸ்புரத்தைச் சேர்ந்த தர்ம பிச்சை மகன் பிரான்சிஸ் (43) அளித்த புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Share on

தூத்துக்குடி வரும் ஓபிஎஸ் : அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடியில் காந்தி சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை!

  • Share on