திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்ய நாளை வருகை தரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முக நாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நடைபெறும் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நாளை 03.10.2021 ஞாயிறு மதியம் தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையம் வந்திறங்கி அங்கிருந்து திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அதன் சமயம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்து இறங்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளருக்கு தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மதியம் 02.30 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட, ஒன்றிய, மாநகர பகுதி, நகர, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் மகளிர்கள் தொண்டர்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ, எஸ்.பி.சண்முக நாதன் ஆகியோர் தெரிவித்துள் ளனர்