• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 3லட்சத்திற்கு விற்பனை செய்த 9 மாத ஆண் குழந்தை - விலைக்கு வாங்கிய 3 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் 9 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (38) என்பவருக்கும், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைகுட்பட்ட கொத்தனார் காலனி பகுதியை ஜெபமலர் (28) என்பவருக்கும் கடந்த 2019 ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இந்நிலையில மேற்படி ஜெபமல ருக்கு அடுத்து திருமணம் செய்ய அவரது குடும்பத்தார் முடிவெடு த்துள்ளனர். அதனால் திருமணத்தி ற்கு தடை ஏற்படும் என்பதால் ஜெபமலரின் 9 மாத ஆண் குழந்தை விற்பனை செய்ய முடிவெடுத்துள் ளனர். இந்நிலை யில் கடந்த 23.09.2021 அன்று ஜெபமலர் தனது சகோதரர் அந்தோணி, ஜெபமலர் தாயார் கிருபா, தந்தை செல்வராஜ், மாமா டேனியல் ஆகியோர் புரோக்கர் களான ஜேசுதாஸ், கார்த்திகேயன் ஆகியோரை தொடர்பு கொண்டு கணவர் மணிகண்டனுக்கு தெரியாமல், தனது 9 மாத ஆண் குழந்தையை ரூபாய் 3 லட்சத்திற்காக 24.09.2021 அன்று விற்பனை செய்துள்ளனர். இதனையறிந்த மணிகண்டன் கடந்த 28.09.2021 அன்று தனது குழந்தையை மீட்டு தருமாறு அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் சங்கர், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து குழந்தையை மீட்டு, சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு ஜெபமலரிடம் குழந்தையை பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய கன்னியா குமரி மாவட்டம், நாகர்கோவில் மேலசூரங்குடி பகுதியை சேர்ந்த ஹரிசந்திரன் மகன் செல்வமணி (52) அவரது மனைவி ஸ்ரீதேவி (40)  மற்றும் அதற்கு உதவியாக இருந்த ராஜபாளையம் ரெட்டியார்பட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் கார்த்திகேயன் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்து 9 மாத ஆண் குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையை விற்பனை செய்த  எதிரிகளான ஜெபமலர், அந்தோணி, கிருபா, செல்வராஜ், டேனியல், புரோக்கர் ஜேசுதாஸ் மற்றும் இதில் சம்மந்தப்பட்ட நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகினற்னர்.

9 மாத ஆண் குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதியினரை கைது செய்து குழந்தையை மீட்ட மேற்படி தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பாராட்டினார்.

  • Share on

விளாத்திகுளத்தில் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா!

தொடர் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுங்க : சிபிஎம் கோரிக்கை!

  • Share on