விளாத்திகுளத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விளாத்திகுளம் நகர காங்கிரஸ் மற்றும் சிவாஜி மன்றம் சார்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93 வது பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ஜேக்கப் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டப்பட்டது.
விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் மேல்மாந்தை கிருஷ்ணன், ஞானராஜ் மற்றும் சமூக ஆர்வலர் எம். ஏ.மேடை சேர்மன், விஜய பாண்டியன், சிவாஜி மன்றத்தை சேர்ந்த வெங்கட்ராமன், அந்தோணி ராயப்பன், வள்ளிநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.