தூத்துக்குடி மாவட்டத்தில் அக்.,2ம் தேதி நடைபெறும் ஊராட்சிகளின் கிராமசபை கூட்டங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தூத்துக்குடி மாவட்டத்தில் உத்தமர் காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்களில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் யாவரும் 100% கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ள தீர்மானம் இயற்றிட வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் சுகாதாரத் துறையின் மூலம் அமைக்கப்பட உள்ளது. இந்த முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தெரிவித்துள்ளார்.