தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெவி லைசன்ஸ் எடுத்த முதல் திருநங்கையான சுபபிரியாவுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான பேட்டரி கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் திருநங்கை சுபபிரியா தூத்துக்குடி மாவட்டத் தில் கனரக வாகனம் ஹெவி லைசன்ஸ் எடுத்த முதல் திருநங் கை ஆவார். இவர் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜைநேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் இருந்தார்.