விளாத்திகுளம் அருகே தீவிபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை, கனிமொழி எம்பி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் அருகே உள்ள ஜமீன் செங்கப்படை கிராமத்தை சேர்ந்த வர் வேல்முருகன், விவசாயி. இவரது மனைவி மதிவதனா. இந்த தம்பதிக்கு தெய்வ வேனுஷியா (6), தெய்வ கனுசியா (4) ஆகிய இரு குழந்தைகள். வேல்முருகன் வீட்டின் அருகில் விநாயகர் கோவில் உள்ளது. கடந்த 21ம் தேதி கோவி லில் தெய்வ வேனுஷியா உள்ளிட்ட 4 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கோவில் விளக்கில் எரிந்த தீ தெய்வ வேனுஷியாவின் ஆடையின் மீது பற்றிப்பிடித்து எரிந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி, விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை நேற்று பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தீவிபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தை இன்று நேரில் சந்தித்து கனிமொழி கருணாநிதி எம்.பி, ஆறுதல் கூறி, நிதி உதவியும் வழங்கினார்.
இந்நிகழ்வின் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண் டேயன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, வட்டாட்சியர் ரகுபதி, விளாத்தி குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் , பொதுக்குழு உறுப்பினர் ராஜாக் கண்ணு, வடக்கு மாவட்ட இளைஞர ணி துணை அமைப்பாளர் மகேந்தி ரன், வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் பாண்டியராஜன், சென்றாயப் பெருமாள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமசுப்பு, அரசகுமார், செந்தில், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.