• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் 138 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 138 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடந்த 23.09.2021 மற்றும் 24.09.2021 ஆகிய இரு தினங்கள் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரு நாட்களில் மட்டும் 75 ரவுடிகள் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து அரிவாள், வாள் போன்ற 53 கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 138 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், ரவுடித்தனம் செய்பவர்கள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றார்.

  • Share on

நான் தான் உங்க குடும்ப டாக்டர் பேசுறேன்.... பண மோசடியில் ஈடுபட்ட தூத்துக்குடி வாலிபர் கைது!

தீவிபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு கனிமொழி எம்பி நேரில் ஆறுதல்!

  • Share on