குடும்ப டாக்டர் எனக்கூறி செல்போனில் அழைத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த சிதம்பர சுப்பையன். இவரது செல்போன் எண்ணுக்கு பேசிய நபர் குடும்ப டாக்டர் போல் பேசி தனக்கு அவசரமாக 30 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சிதம்பர சுப்பையன் கூகுள் மூலமாக பணத்தை அனுப்பியுள்ளார்.
இதைப் போன்று மறுநாளும் சிதம்பர சுப்பையன் எண்ணுக்கு பேசிய மர்ம நபர், மீண்டும் பணம் கேட்டுள்ளார். அப்போது சந்தேகம டைந்த சிதம்பர சுப்பையன் டாக்டரை தொடர்பு கொண்டு பேசியபோது தான் ஏமாற்றப்பட் டதை உணர்ந்தார். உடனே தேசிய சைபர் கிரைம் என்ற இணைய தளத்தில் புகாரை பதிவு செய்தார்.
ஏடிஎஸ்பி சுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் இசக்கிமுத்து பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.