இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய பெண்களை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கோவில்பட்டியிலிருந்து இருசக்கர வாகனத்தில் விளாத்திகுளம் நோக்கி வந்த இரு பெண்கள் பிள்ளையார்நத்தம் கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் நிலைதடுமாறி விழுந்தனர்.
இதனையடுத்து அவ்வழியாக வந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விபத்துக்குள்ளான அப்பெண் களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு தனது வாகனத்தில் அனுப்பி வைத்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு, அரசு மருத்துவ மனை மருத்துவரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தினார்.