தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் அமைந்துள்ள சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணிச் செயலாளர் வழக்கறிஞர் அந்தோணிபிச்சை ஆகியோர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
விழாவில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ், தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம், தொழிலாளர் அணிச் செயலாளர் சதாசிவம், வர்த்தகர் அணி சிவசு முத்துக்குமார், விவசாய அணி சரவணன், மாநகரச் செயலாளர் உதயசூரியன், அவைத் தலைவர் மதியழகன், மாநகர துணை செயலாளர் மணிகண்டன், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் பொன்னுத்துரை, மங்களம் பைனான்ஸ் மேலாளர் செல்வராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.