
தூத்துக்குடியில் மணல் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். டாரஸ் லாரி மற்றும் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி ( Hitachi) வாகனமும், 3 யூனிட் குளத்து மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் இன்று (26.09.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது வர்த்தக ரெட்டிப்பட்டி அருகிலுள்ள தலைவன் குளத்தில் தூத்துக்குடி ஹவுஸிங் போர்ட் பகுதியை சேர்ந்த அருள்மணி மகன் யோகா பிரவின் ஜேம்ஸ் (24), ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சீதாராம் சர்மா மகன் லோகேஷ் குமார் சர்மா (28) மற்றும் அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் ஜெயகண்ணன் (45) ஆகிய மூவரும் ஹிட்டாச்சி இயந்திரம் மூலமாக டாரஸ் லாரியில் குளத்து மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து மேற்படி எதிரிகள் 3 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி இயந்திரம், டாரஸ் லாரி மற்றும் 3 யூனிட் குளத்துமணலும் பறிமுதல் செய்யப்பட்டது.