வீட்டின் ஓட்டை பிரித்து திருட முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சத்திரப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் ராஜா (26). இவரது உறவினரான சுப்பையா என்பவரது வீடு சத்திரப்பட்டி நடுத்தெருவில் உள்ளது. அந்த வீட்டில் நேற்று (25.09.2021) கோவில்பட்டி கதிரேசன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரை மகன் ராஜா (22) மற்றும் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலை (20) ஆகிய இருவரும் ஓட்டை பிரித்து திருட முயற்சித்து கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அந்தோணி திலீப் வழக்கு பதிவு செய்து சுரேஷ் மற்றும் சுடலை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.