தூத்துக்குடியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தவர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜா மகன் டால்வின் (35). இவர் 24.09.2021 அன்று 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வனிதா அவர்கள் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து டால்வினை கைது செய்து சிறையில் அடைத்தார்.