• vilasalnews@gmail.com

கனிமொழி எம்.பி யுடன் த.வீ.க.ப.க நிர்வாகிகள் சந்திப்பு!

  • Share on

சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்று, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை  தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுகழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவையின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது செய்தித்துறை (செய்தி மற்றும் விளம்பரம்) மானியக் கோரிக்கை யின் போது, இந்திய முதல் சுதந்திர போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள கிண்டி வளாகத்தில் முழு திரு உருவ சிலை அமைக்கவும், தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங் குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில் மாணவ- மாணவி யர்கள், கட்டபொம்மன் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் ஒலி-ஒளி அமைக்கவும், திருப்பூர் உடுமலை பகுதியில் தளி பாளையக்காரர் எத்திலிப்ப நாயக்கருக்கு முழு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கவும், அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும், கோரிக்கைகளை  அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்றவர்களின் ஒருவரான தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை, தமிழ்நாடு வீரபாண்டிய கட்ட பொம்மன் பண்பாட்டுகழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் "வலசை" கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் ராமலிங்கம், மல்லுச் சாமி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மேலும், அக்டோர் 16 ஆம் தேதி, கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம் மன் நினைவிடத்தில் நடைபெறும் அவரது நினைவு நாள் புகழஞ்சலி விழாவிற்கு வருகை தர, கனி மொழி எம்.பி க்கு, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுகழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

  • Share on

திருச்செந்தூர் கோவிலில் தரிசன நேரம் அதிகரிப்பு - கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - ஒருவர் கைது... 5 அரிவாள் பறிமுதல்!

  • Share on