தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 16 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 80 மதுபாட்டில்கள் மற்றும் ரூபாய் 900 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற் கொண்டதில் நேற்று (19.09.2021) தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், தாளமுத்துநகர், ஆறுமுகநேரி, பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி மேற்கு, கயத்தார், விளாத்திகுளம், குளத்தூர், மெஞ்ஞானபுரம், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 13 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 16 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 80 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய்.900/- பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.