மத்திய பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடியில் திமுகவினர் கருப்புகொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேளாண் சட்டங்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடத்த தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது, இதன்படி, இன்று காலை 10 மணியளவில் திமுக நிர்வாகிகள், தங்களின் இல்லம் முன்பாக கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு மத்திய பாஜக அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பாலகுருசாமி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருண் சுந்தர், போல்பேட்டை பகுதி பிரதிநிதி லிங்கராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.