• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நாளை மின்தடை!!

  • Share on

தூத்துக்குடியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் நாளை (செப்.17) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர மின் விநியோக செயற் பொறியாளர் பத்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு :

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம்- 110/22கி.வோ டவுன் துணைமின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செய்யப்படும் பவர் மின்மாற்றியில் நாளை (17.09.2021) வெள்ளிக்கிழமை அவசர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 

இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ம் கேட், 2ம் கேட், மட்டக்கடை, பீச்ரோடு, இனிகோ நகர், விஇ ரோடு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதர நகர், எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம், சிவன் கோவில் தெரு, டபிள்யூஜிசி ரோடு, சந்தை ரோடு, ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 08.00 மணி முதல் 10.30 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி அருகே கந்துவட்டி வசூலித்ததாக நிதி நிறுவனங்கள் மீது வழக்கு!

தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து திமுக கருப்புகொடியேந்தி ஆர்ப்பாட்டம்!

  • Share on