• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே கந்துவட்டி வசூலித்ததாக நிதி நிறுவனங்கள் மீது வழக்கு!

  • Share on

தூத்துக்குடி அருகே கந்துவட்டி வசூலித்ததாக நிதி நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் திருமணி. இவருடைய மனைவி மல்லிகா (வயது 52). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுக் கோட்டை, கோரம்பள்ளம், தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 4 நிதி நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கோரம்பள்ளத்தை சேர்ந்த சிலரிடமும் மொத்தம் ரூ.15 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம். இதற்கு முறையாக வட்டி செலுத்தி வந்தாராம். இந்த நிலையில் நிதிநிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், மல்லிகா மொத்தம் ரூ.26 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறினார்களாம்.

இது குறித்து மல்லிகா புதுக்கோட் டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், 4 நிதி நிறுவனங்கள், 6 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் 5 பேர் மீது கந்துவட்டி வசூலித்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

விளாத்திகுளம் அருகே போலி ஆவணம் மூலம் மோசடி செய்த ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலம் மீட்பு!

தூத்துக்குடியில் நாளை மின்தடை!!

  • Share on