எட்டயபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நகர செயலாளர் ராஜகுமார் உட்பட அதிமுகவினர் அண்ணாவின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.
பேரறிஞர் அண்ணாவின் 113து பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் செ.ராஜு மற்றும் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோரின் ஆலோசனையின்படி,
எட்டயபுரம் பேரூர் கழகம் சார்பில் அவரின் திருஉருவப்படத்திற்கு நகரச்செயலாளர் ராஜ குமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், நகர அவைத்தலைவர் கணபதி, பொருளாளர் தங்கதுரை, மகளிர் அணி செயலாளர் செல்வி, வார்டு செயலாளர் சாந்தி, கருப்பசாமி உள்ளிட்ட அதிகமுகவினர் கலந்து கொண்டனர்.