• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் விழா : அமைச்சர் கீதாஜீவன் அழைப்பு

  • Share on

தூத்துக்குடியில்  தி.மு.க சார்பில் வருகிற 15ம் தேதி பேரறிஞா் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் விழா நடைபெற உள்ளதாக திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்  தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 

கடமை கண்ணியம் கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளா், இப்படை தோற்கின் எப்படை வெல்லும், ஒன்றே குலம் ஒருவனே தேவன், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற தத்துவத்தைப் போதித்த தகைசால் பண்பாளா். மெட்ராஸ் என்ற பெயரை தமிழ்நாடு என்று சூட்டிய தமிழகத்தின் தலை மகன், சுயமரியாதை சுடரொளி – சொக்க வைக்கும் சொற்பொழிவாளா் – தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவா் பேரறிஞா் என்று அனைவராலும் போற்றப்படும் பேரறிஞா் பெருந்தகை அறிஞா் அண்ணா அவா்களின் 113-வது பிறந்த தினமான 15.09.2021 புதன்கிழமை அன்று காலை 8.30 மணி அளவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி புதிய மாநகராட்சி அருகிலுள்ள பேரறிஞா் அண்ணா அவா்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

அதுபோல வடக்கு மாவட்ட தி.மு.கழகத்திற்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பேரூா் மற்றும் ஊராட்சிக் கழகங்கள் தோறும் பேறிஞா் அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திடவும், திருவுருவச்சிலை இல்லாத ஊர்களில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்திடவும் தி.மு.கழகத்தினா் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதன்பின் மாலை 5.00 மணிக்கு தி.மு.கழகத்தின் முப்பெரும்விழா கழக தலைவா் தமிழக முதல்வா் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக அந்தந்த மாவட்டங்களில் கானொலி காட்சி வாயிலாக விழாவில் கலந்து கொள்ள வேண்டும்  என்று அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்புக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் 15.09.2021 மாலை 5.00 மணிக்கு புதிய பேரூந்து நிலையம் அருகில் உள்ள கீதா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாநகர, நகர ஒன்றியஇ பகுதி, பேரூா்க் கழக செயலாளா்கள், கழக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளா்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளா்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

  • Share on

124 நாளில் 300 கோவில்களுக்கு திருப்பணி ‌: அமைச்சர் சேகர்பாபு தகவல்

தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா : அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

  • Share on