• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தலைவி திரைப்பட ரசிகர் காட்சி : அதிமுகவினர் கண்டுகளிப்பு!

  • Share on

தூத்துக்குடியில் தலைவி திரைப்பட ரசிகர் காட்சியினை அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டுகளித்தனர். 

தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மா ஆகியோர் சினிமா மற்றும் அரசியலில் கடந்து வந்த பாதை குறித்த ஆவணப் படமாக திரைப்பட நடிகர் அரவிந்த்சாமி, பாலிவுட் திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் மற்றும் சமுத்திரகனி தம்பி ராமையா நடித்துள்ள தலைவி திரைப்படம் வெளிவந்துள்ளது. இந்தப்படம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாறு எடுத்துக் கூறும் விதமாக உள்ளதால் அதனை கண்டுகளிக்க தூத்துக்குடி கேஎஸ்பிஎஸ் கணபதி திரையரங் கத்தில் இன்று மதியம் 2.30 மணி காட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் ரசிகர்கள் சிறப்பு காட்சியாக ஏற்பாடு செய்யப்பட்டது. 

அதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முக நாதன் கலந்து கொண்டு அதிமுக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் டேக் ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், மாவட்ட இணைச் செயலாளர் செரினா பாக்கியராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஸ்ரீவை குண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, ஒன்றிய கழகச் செயலாளர் திருச்செந்தூர் இராமச்சந்திரன், மற்றும் அதிமுக நிர்வாகிகள், ரசிகர்கள், மகளிர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவினர் செய்திருந்தனர். 

  • Share on

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு - நீதிமன்றம்

124 நாளில் 300 கோவில்களுக்கு திருப்பணி ‌: அமைச்சர் சேகர்பாபு தகவல்

  • Share on