தூத்துக்குடியில் நடைபெற்ற தெற்கு மாவட்ட பாஜக ஐடி விங்க் செயல்வீரர்கள் கூட்டத்தில், புதிய தலைவராக காளிராஜா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி யின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகபிரிவில் மாவட்ட தலைவராக
இருந்து வந்த இரத்தினமுரளி அண்மையில் மாநில செயலாளராக மாநில தலைமையினால் நியமிக்கப் பட்டார். இதனை தொடர்ந்து இன்று மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில், இதுவரை தூத்துக்குடி வடக்கு மண்டலம் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்து வந்த காளிராஜா, மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகபிரிவு தலைவர் நிர்மல் குமார் அறிவுறுத்தியதின் அடிப்படையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பால்ராஜ், மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் இரத்தினமுரளி ஆகியோர் காளிராஜாவை தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராக நியமித்தனர்.
இதில் மாவட்ட செயலாளர்கள் கணேஷ் மானோ அமர்நாத் மற்றும் மண்டல நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.