தூத்துக்குடியில் அதிமுகவின் மாவட்ட செயலாளர் இன்றி, நடைபெற்ற அதிமுக எம்ஜிஆர் மன்ற ஆலோசனை கூட்டத்தால் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான பன்னீர்செல்வம், இணை ஓருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆலோசனைப்படி, தூத்துக்குடியில் அதிமுக 50வது ஆண்டு பொன் விழா கொண்டாம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி,ஆர் மன்ற துணைச் செயலாளர் ஜோதிமணி, பகுதி எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சாமுவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சேவியர், ஆகியோர் வரவேற்புரை யாற்றினார்கள்.
பின்னர் முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப் பாண்டியன் பேசுகையில் :
வரும் உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மேயர் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். தொண்டர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க நான் தயார். அதிமுக 50 வது ஆண்டு பொன்விழாவில் மாநகர் முழுவதும் கொண்டாடப் படும். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை எந்த தொண்டனும் மனநிறைவோடு ஏற்றுக்கொள்ளவில்லை காரணம் சில குறைபாடுகள் தான். இனி வரும் காலங்களில் அது நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் பனியாற்றி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்றார்.
மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆறுமுகநயினார் பேசுகையில் :
ஆளும் கட்சியாக இருந்து தேர்தலை சந்தித்தும் எதிர்கட்சியாக வந்தது மிகவும் மன வேதனையை அளிக்கிறது. பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளோம். அதை சரிசெய்ய எடப்பாடி பழனிச்சாமி நல்ல முடிவை விரைவில் அறிவிப்பார். தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலை அமைக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் நீலமேகவர்ணம், மாவட்ட பொருளாளர் அமலிராஜன், சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் மைதீன், முன்னாள் ஒன்றிய செயலாளர் செங்கான், ஜெ பேரவை செயலாளர் காயல் அன்வர், தலைமை கழக பேச்சாளர்கள் கருணாநிதி, ராஜசேகர், முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் நிர்வாகிகள் அரசகுரு, மேலூர் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர்கள் பொன்ராஜ், ஜெயக்குமார், சகாயராஜ், கோல்டன், சர்மிளா அருள்தாஸ், முருகேசன், தமிழரசி, ஆனந்தகுமார், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஞானபுஷ்பம், திருமணி, மேரி, முன்னாள் வட்டச்செயலாளர்கள் சகாயராஜ், திருமணி, கருப்பசாமி, கெய்னஸ், தமிழரசன், ரெங்கன், முன்னாள் அவைத்தலைவர் அந்தோணி சேவியர், வட்டப்பிரதிநிதிகள் டைமன் ராஜ், சுப்புராஜ், வட்டச்செயலாளர் பழனிச்சாமி பாண்டின், ஜெ பேரவை துணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அதிமுக பொன்விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது, நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மாவட்டம் முழுவதும் முழுமையான வெற்றிக்கு உழைப்பது, ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயர் மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும், தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பூங்காவில் எம்.ஜி.ஆர் சிலை வைக்க வேண்டும், தூத்துக்குடி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஓதுக்காமல் அதிமுகவிற்கு ஓதுக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பகுதி செயலாளர் முருகன் நன்றியுரை யாற்றினார்.
தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், உட்கட்சி பூசலால் மாவட்ட செயலாளர் சண்முக நாதன் இல்லாமல் அவருக்கு எதிராக அனல் பறக்கும் பேச்சுகள் கூட்டத்தில் இடம் பெற்று கூட்டம் பரபரப்பாக கானப்பட்டது குறிப்பிட தக்கது.