• vilasalnews@gmail.com

இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் : சாலை பணியாளர் சங்கம் கோரிக்கை !

  • Share on

றந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மாதம் 22ஆம் தேதி திருவண்ணாமலையில் நடந்து முடிந்த மாநில செயற்குழு கூட்டத்தில் சாலைப்பணியாளர்கள் 15 ஆண்டுகால தீர்க்கப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் சாலை பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செம்புலிங்கம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் சண்முகராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் அண்ணாத்துரை நன்றியுரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து மாநில தலைவர் சண்முகராஜா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கி அரசுக்கு பரிந்துரை செய்திட கேட்டுக் கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் பாரதியார் நினைவு நாள் அனுசரிப்பு!

  • Share on