தூத்துக்குடியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த பணியாளர்களுக்கு நிவாரண உதவி மற்றும் வாரிசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை மண்டல தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில இணை பொது செயலாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். மாநிலதுணை தலைவர் மரகதலிங்கம், மாநில செயலாளர்கள் முருகானந்தம், கண்ணையன், மோஸ்லின் பியர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க முன்னாள் பொது செயலாளர் கணேசன் சிறப்புரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் வெங்கடேசன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி, கன்னியாகுமரி மாவட்ட தலைவர் பாஸ்கர், அரசு பணியாளர் சங்கம் ஆவுடையப்பன், பிரச்சார செயலாளர் மாடசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.