• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை : வாலிபர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகன் மாரிமுத்து (23). இவர் கடந்த 26.08.2021 அன்று 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்யப்பட்டார்.

  • Share on

கோவில்களில் சாமக்கொடை விழா நடத்த அனுமதிக்க கோரிக்கை!

தூத்துக்குடியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • Share on