கோவில்களில் சாமக்கொடை விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆடி, ஆவணி மாதங்களில் அம்மன், காளி, மாடன், முனியசாமி, கருப்பசாமி போன்ற கோவில்களில் கொடை விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் வழிபாட்டு முறைகளில் சாமக்கொடை விழா எனும் மரபு வழிபாடானது தமிழ் இந்து கோவில் கலாச்சார வழிபாட்டு முறைகளில் தவிர்க்க முடியாத மிக முக்கிய நிகழ்வாகும்.
இந்நிலையில் தற்போது கோவில் கொடை விழாவில் சாமக்கொடை விழா நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆகவே இந்து கோவில்களில் சாமக்கொடை விழா நடத்த காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்ட காவல் கண்கானிப் பாளர் ஜெயக்குமாரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இதில், நிர்வாகிகள் காசி பாண்டியன், ராகவேந்திரா, மாதவன், ஆறுமுகம், சரவணகுமார். சுடலை செல்வம், முனியசாமி, கிருஷ்ணராஜ், சுடலை, சுடலைமணி, விக்னேஷ், ஆழ்வார், பழனியாண்டி, குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.