• vilasalnews@gmail.com

மணல் திருட்டு : டிராக்டர் , கார் பறிமுதல் - 3 பேர் கைது!

  • Share on

சூரங்குடி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டிராக்டரில் மணல் திருடியவர்கள் கைது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் காவல் துணை கண்காணிப் பாளர்கள் மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர்  பிரகாஷ்  மேற்பார்வையில் விளாத்திகுளம் உட்கோட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் பகுதியில் வேம்பார் கிராம நிர்வாக அலுவலர் பொன்பாரத் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அவ்வழியாக TN55 AP 7203 என்ற டிராக்டரை மறித்து சோதனை செய்ததில் அதில் சுமார் 3/4 யூனிட் மணல் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் டிராக்டர் ஓட்டுநரான கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி மகன் ஹரி கிருஷ்ணன் (57) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் டிராக்டர் உரிமையாளரான வேம்பார் சிந்தாமணி நகரைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் முத்தழகு (59) என்பவர் மணல் திருடச் சொன்னது தெரியவந்தது. அப்போது டிராக்டருக்கு பாதுகாப்பாக TN 69 AV 1011 TATA ARIA என்ற காரில் வந்த முத்தழகு மற்றும் கார் ஓட்டுநரான திரவிய புரத்தைச்  சுடலைமாடன் மகன் முனீஸ்வரன் (38) ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியும் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தும் சுமார் 3/4 மணி நேரம் வாக்குவாதம் செய்துவிட்டு காரில் தப்பித்து சென்று விட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகு, ஹரிகிருஷ்ணன் மற்றும்  முனீஸ்வரன்  ஆகிய 3 பேர் மீதும் 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Share on

ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா : திருவிளக்கு பூஜை!

கோவில்களில் சாமக்கொடை விழா நடத்த அனுமதிக்க கோரிக்கை!

  • Share on