ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் 11வது தெருவில் உள்ள ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோவில் 55ம் ஆண்டு கோவில் கொடை விழா மற்றும் வருஷாபிஷேக விழாவானது 29.08.2021 ஞாயிற்றுக் கிழமை முதல் 01.09.2021 புதன்கிழமை வரை நடைபெறுகிறது.
கோவில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 24.08.2021 அன்று காலை கால் நட்டு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று ( 29.08.2021 ) கோவில் பெண்கள் குழு ஏற்பாட்டில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வாழ்த்தி பாடல்கள் பாடினார்கள்.