• vilasalnews@gmail.com

நடிகர் விஷால் பிறந்தநாள்: ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கல்!

  • Share on

டிகர் விஷால் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்ட  புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் அவரது ரசிகர்கள் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கி கொண்டாடினர். 

நடிகர் விஷாலின் 44 வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மடத்தூரில் உள்ள அலெக்ஸ் கைலாசம் ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கி  நடிகர் விஷாலின் பிறந்த நாளை கொண்டாடினர்.

இதில், தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்க தலைவர் பிரகாஷ், மாவட்ட துணை தலைவர் சண்முகராஜ், மாவட்ட சட்ட ஆலோசகர் நாகராஜ் , மாநகர செயலாளர் பெலிக்ஸ், நிர்வாகிகள் சென்ராயப் பெருமாள், சரவணன், சீத்தாராமன், வன்னிராஜ், திவாகர், கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்க : தமிழ்நாடு பண்ணையார் சமுதாய நலச் சங்கம் ஆர்ப்பாட்டம்!

ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா : திருவிளக்கு பூஜை!

  • Share on