தூத்துக்குடியில் மிகவும் பின்தங்கியோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கிய அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு பண்ணையார் சமுதாய நலச் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மிகவும் பின்தங்கியோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு மட்டும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டு இருப்பது பண்ணையார் சமுதாயம் மற்றும் பிற மிகவும் பின்தங்கிய சமூகத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ள நிகழ்வு ஆகும். அதனால் இதனை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு பண்ணையார் சமுதாய நலச் சங்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் இன்று ( 29.08.2021 ) காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு பண்ணையார் சமுதாய நலச் சங்கம் மாநில செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பண்ணையார் சமுதாய நலச் சங்கம் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கீழக்கரை சங்கர் சிறப்புரை யாற்றினார். பொருளாளர் வி.கே.எஸ் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.