நெல்லுக்கான காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்வதை உடனடியாக கைவிட வேண்டும் எனக் கோரி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நெல்லுக்கான காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்வதை உடனடியாக கைவிடக் கோரி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொது செயலாளர் கிஷோர் குமார் ஆலோசனையின் பெயரில் தமிழக பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், ஸ்ரீராம் (கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளர்) தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து அவர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்வதாக தற்போது செய்திகள் வந்துள்ளதை நாங்கள் அறிந்தோம். அந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற்று பயிர் காப்பீட்டு திட்டத்தில் உள்ள அனைத்தை யும் உடனடியாக வழங்க வேண்டும், விவசாயிகளின் நலன் கருதி உரங்களின் விலையை உயர்த்தும் திட்டத்தையும் உடனடியாக கைவிட வேண்டும், மேலும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் உரங்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், கடந்த ஆட்சியில் சரியாக முறை படுத்தாமல் விடப்பட்ட அனைத்து உழவர் சந்தைகளையும் மீண்டும் சீராக இயங்க வழிவகை செய்ய வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து விவசாயம் சார்ந்த கூட்டம் நடைபெறும் போது பாரதீய ஜனதா கட்சி கன்னியாகுமரி பெருங்கோட்டப் பொறுப்பாளராக உள்ள எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார்.
இதில் மாவட்ட விவசாய அணி பொறுப்பாளர் கண்ணன், விவசாய அணி மாவட்ட திட்ட ஒருங்கிணைப் பாளர் சுடலினா தேவி, ஓபிசி அணி மாவட்ட துணை தலைவர் சரவணகுமார், வழக்கறிஞர் பிரிவு பிரபு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.