• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவக்கம்!

  • Share on

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை டீன் நேரு தொடங்கி வைத்தார்.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இன்று தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆஸ்பத்திரி டீன் நேரு தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

 தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு வரக்கூடிய தொற்றா நோயாளிகள், அதாவது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், அதிக எடை உடையவர்கள் மற்றும் சுவாச குழாய் புற்று நோய் உள்ளவர்களை நாங்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு ஒரு குறியீட்டு எண் வழங்கப்படும். 

இந்த எண் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் மூலமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள டாக்டர்கள் மற்றும் சுகாதார செவிலியர்கள் இந்த நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து, அவர்கள் தொடர் சிகிச்சை செய்து வருகிறார்களா, மாத்திரை உட்கொள்கிறார்களா? என்பதை கவனித்து அவர்களுடைய உடல்நலம் மேம்பட்டு, நோயில் இருந்து விடுபட உறுதுணையாக இருப்பார்கள். மேலும், தேவையான சிகிச்சைகளை அளிப்பார்கள். மேல்சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களுக்கு அனுப்பி வைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, மருத்துவ கண்காணிப்பாளர் பாவலன், துணை கண்காணிப்பாளர் குமரன் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.


  • Share on

சென்னையில் 2வது திருமணம்... தட்டிக்கேட்ட தூத்துக்குடி மனைவிக்கு மிரட்டல்...கணவர் மீது வழக்கு பதிவு!

தூத்துக்குடியில் பணியில் அஜாக்கிரதை... 4 காவலர்கள் சஸ்பென்ட் - எஸ்பி நடவடிக்கை!

  • Share on