• vilasalnews@gmail.com

சென்னையில் 2வது திருமணம்... தட்டிக்கேட்ட தூத்துக்குடி மனைவிக்கு மிரட்டல்...கணவர் மீது வழக்கு பதிவு!

  • Share on

தூத்துக்குடியில் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்தது தொடர்பாக தனியார் நிறுவன மேலாளர் உட்பட 4பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

தூத்துக்குடி செல்சினி காலனியைச் சேர்ந்தவர் செல்வன் மகன் மாதவன் (39), இவருக்கும் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருப்புளியங்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த வாசுகி (38) என்ற பெண்ணுக்கும் கடந்த 2009ல் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது, பெண் வீட்டார் 23 பவுன் நகைகளை வரதட்சனையாக அளித்துள்ளனர். 

மாதவன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலைபார்தது வருகிறார். இதனால் அடிக்கடி சென்னைக்கு சென்று விடுவாராம். அப்போது சென்னையில் அனிதா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டு, 5 வருடங்களாக அவருடன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார். அவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. 

இந்த விபரத்தை அறிந்த வாசுகி கண்டித்தபோது, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து வாசுகி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், மாதவன், அனிதா, மாதவனின் தாயார் மோகனா, தம்பி ஹரிஹரன் ஆகிய 4பேர் மீது வழக்குப் பதிந்து சப் இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி வருகிறார்.

  • Share on

பிரபல கொள்ளை வழக்கில் சிக்கிய கைதி தப்பியோட்டம் : தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவக்கம்!

  • Share on