நடிகர் விஷால் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஷாலுக்கு வருகிற ஆகஸ்ட் 29 ம் தேதி அன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் , ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கி நடிகர் விஷாலின் பிறந்த நாளை கொண்டாட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்க தலைவர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.