• vilasalnews@gmail.com

மழை வளம் பெருக, விவசாயம் செழிக்க, கொரானா தொற்று நீங்க சிறப்பு வழிபாடு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் வினைதீர்த்த வினாயகர் கோவிலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் மழை வளம் வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், கொரானா தொற்று நீங்கி மக்கள் நலமுடன் வாழ வேண்டியும் கிராம நல வழிபாடு, வளைகாப்பு விழா நடைபெற்ற‌து. சிறப்பு வழிபாட்டை மன்ற தலைவர் சங்கரஈஸ்வரி தொடங்கி வைத்தார்.

இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு 108 தமிழ் மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் மேல்மருவத்தூர் என்ற தலைப்பில் சக்திமுத்தையா ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம், சிறப்பு வழிபாடு

அன்னதானத்தை முதுநிலை வருவாய் ஆய்வாளர் லோகநாதன் துவக்கி வைத்தார். கருங்குளம், புளியங்குளம், செய்துங்கநல்லூர், அய்யனார் குளம்பட்டி, தோழப்பன்பன்னை ஆகிய கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வழிபாட்டில் கலந்து கொண்ட மக்கள் அனைவருக்கும் அருட் பிரசாதம், அன்னையின் திருவுருவப்படம் வழங்கப்பட்டது.

விழாவில், ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன், பொருளாளர் கண்ணன், தணிக்கை வேலு, இளைஞர் அணி செல்லத்துரை, திருவிக நகர் சக்திபீடம் மகளிர் அணி பிரமிளா, புளியங்குளம் புஷ்பா, வேள்விக்குழு சாந்தி, ஸ்ரீவைகுண்டம் வட்டத்தலைவர் வண்டிமலையான், புதுக்கோட்டை விஜயா, முத்துமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

கோயில் நிலத்தை மீட்கக் கோரி ஆக.26ல் மறியல் : பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவிப்பு!

நடிகர் விஷால் பிறந்தநாள்: ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட முடிவு!

  • Share on