• vilasalnews@gmail.com

கோயில் நிலத்தை மீட்கக் கோரி ஆக.26ல் மறியல் : பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவிப்பு!

  • Share on

குளத்தூரில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வலியுறுத்தி வரும் 26ம் தேதி (வியாழக்கிழமை) மறியல் போராட்டம் நடத்தப்படும் என பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூரில் ஸ்ரீகுழந்தை விநாயகா் கோயில் நிலம் பாதுகாப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் பாஜக ஒன்றிய துணைத் தலைவா் லிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். பாஜக நிா்வாகிகள் சின்னச்சாமி, கணேசன், பாா்த்திபன், கந்தசாமி, மாரிமுத்து, மூா்த்தி, சுயம்பு, கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், இக்கோயில் நிலத்தை சிலா் விவசாயிகள் என்ற போலியாக குத்தகைக்கு எடுத்து உப்பளமாக பயன்படுத்தி வருவதால், கோயில் நஞ்சை நிலம் பாழாகி வருவதோடு அருகிலுள்ள விவசாய நிலங்களும் பாழாகி வருகின்றன. இந்நிலம் தொடா்பான வழக்கில் ஆக்கிரமிப்பாளா் களை வெளியேற நீதிமன்றம் உத்தவிட்டது. எனினும் ஆக்கிரமிப்பாளா் களை அங்கிருந்து அகற்றாமலேயே அந்த நிலத்தை வரும் 27ஆம் தேதி ஏலம் விடப்படும் என இந்துசமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. 

எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், அதுவரை ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும், கோயில் நிலத்தை பாதுகாக்க தவறிய அதிகாரிகளை கண்டித்தும் வரும் 26ஆம் தேதி (வியாழக்கிழமை) பாஜக, விஷ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி சாா்பில் குளத்தூா் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

  • Share on

லாரி - பைக் மோதல்: புது மாப்பிள்ளை பரிதாப சாவு!

மழை வளம் பெருக, விவசாயம் செழிக்க, கொரானா தொற்று நீங்க சிறப்பு வழிபாடு!

  • Share on