• vilasalnews@gmail.com

லாரி - பைக் மோதல்: புது மாப்பிள்ளை பரிதாப சாவு!

  • Share on

தூத்துக்குடி அருகே லாரி மீது மோட்டார் பைக் மோதியதில் புது மாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லம்பரும்பு கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் லட்சுமணன் (30). இவர் தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினமான வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது குறுக்குச்சாலை அருகே பெட்ரோல் பங்க் அருகில் ரோட்டில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக பைக் மோதியது. 

இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த  லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பொய்யாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் கணேசனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த லட்சுமணனுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்துடன் புதிய யூனியன் உருவாக்கி இணைப்பு : கனிமொழி எம்.பி யிடம் கோரிக்கை!

கோயில் நிலத்தை மீட்கக் கோரி ஆக.26ல் மறியல் : பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவிப்பு!

  • Share on