கோவில்பட்டியில், கனிமொழி எம்.பி.யிடம் விவசாய சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கோவில்பட்டிக்கு வந்த கனிெமாழி எம்.பி.யிடம் தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரங்கநாயகலு உள்ளிட்டவர்கள் மனு அளித்தனர். அதில், ‘இளையரசனேந்தல் பிர்காவைச் சேர்ந்த 12 பஞ்சாயத்துகள் கோவில்பட்டி தாலுகாவுடன் கடந்த 2008-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்கப்பட்டன.
எனினும் இளையரசனேந்தல் பிர்கா கடந்த 13 ஆண்டுகளாக கோவில்பட்டி யூனியனுடன் இணைக்கப்படாமல் குருவிகுளம் யூனியனில் உள்ளது. எனவே இளையரசனேந்தல் பிர்காவிலுள்ள 12 பஞ்சாயத்துகளை உடனடியாக கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வேண்டும், அல்லது இளையரசனேந்தலை தலைமை யிடமாக கொண்டு புதிய யூனியன் உருவாக்கி தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.