
கொரோனா தொற்று நீங்கி பொதுமக்கள் நலமுடன் வாழவேண்டி முடிவைத்தானேந்தல் கிராமத்தில் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் கொரோனா தொற்று நீங்கி மக்கள் நலமுடன் வாழ வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கொரோனா தொற்று நீங்கி மக்கள் நலமுடன் வாழ வேண்டியும், மழை வளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், குழந்தைகள் கல்வி அறிவு சிறக்கவும் வேண்டி 108, 1008 தமிழ் மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேள்வி பூஜையை மாவட்ட இளைஞர் அணி செல்லத்துரை தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற கிராம நல வழிபாட்டை வேள்விக்குழு செயலாளர் கிருஷ்ணநீலா தொடங்கி வைத்தார். பிரச்சாரக்குழு செயலாளர் முத்தையா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். சக்தி கொடியை பத்மா ஏற்றி வைத்தார். இந்ந்கழ்ச்சியில், ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன், பொருளாளர் கண்னன், திருவிக சக்திபீட மகளிர் அணி பிரமிளா, வேள்விக்குழு வட்ட பொறுப்பாளர் கிருஷ்ணவேணி, சாந்தி, வட்ட தலைவர் திணேஷ், மன்ற பொறுப்பாளர்கள் காளிமுத்து, நயினார், கணேசன், ராமலிங்கம், லோகியாநகர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.