ஓட்டப்பிடாரம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் கிராமத்தில் சந்தனமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. கொடை விழாவை முன்னிட்டு பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் நெல்லை, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், தஞ்சாவூர், தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
முதலாவதாக நடந்த பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் பதினெட்டு வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை மதுரை அவனியாபுரம் மோகன்சாமி குமார் வண்டி தட்டிச்சென்றது. இரண்டாவது பரிசை குமரெட்டியாபுரம் சவந்தர் மகா விஷ்ணு வண்டியும், மூன்றாவது பரிசை சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் வண்டி வெற்றி பெற்றன.
சிறிய மாட்டு வண்டி போட்டியில் 62 வண்டிகள் கலந்து கொண்டன. இரு பிரிவுகளாக பிரித்து விடப்பட்டன. இதில் மதுரை அவனியாபுரம் மற்றும் சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் ஆகியோர் வண்டிகளும் முதல் பரிசை தட்டிச் சென்றது. இரண்டாவது பரிசை ராமநாதபுரம் சுற்றில் வெள்ளையாபுரம், தென்காசி கலிங்கப்பட்டி வண்டியும், மூன்றாவது பரிசை தஞ்சாவூர் பூங்கொல்லை, நெல்லை முருகன் குறிச்சி வண்டிகள் தட்டிச்சென்றன.
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரூ.21ஆயிரம், ரூ.18 ஆயிரம், ரூ.15 ஆயிரம் ஆகிய பரிசுகளை விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, ஓட்டப்பிடாரம் யூனியன் துணைத்தலைவர் காசிவிசுவநாதன் ஆகியோர் வழங்கினா். சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரூ15 ஆயிரம், ரூ13ஆயிரம், ரூ11 ஆயிரம் ஆகிய பரிசுகள் இரு பிரிவுகளாக ஒட்டப்பிடாரம் சண்முகையா எம்.எல்.ஏ. வழங்கினார்.