• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரை சந்தித்து பாஜக மாநில செயலாளர் கோரிக்கை

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் அவர்களை சந்தித்து பாஜக மாநில செயலாளர் கரு. நாகராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.

கந்தசஷ்டி கவசத்தை இழிவு படுத்தி சமூக ஊடகத்தில் வெளியிட்டவர்களை கண்டித்து தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சியினர் வேல் பூஜை அறிவித்தனர். அதைத்தொடர்ந்து முருக பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் வேல் யாத்திரை நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.

இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி கடந்த 6-ந் தேதி திருத்தணியில் வேல் யாத்திரையை மாநில தலைவர் எல்.முருகன் தொடங்கினார். தடையை மீறியதால் அவர் கைது செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களிலும் வேல் யாத்திரை தொடங்குவதும், கைது செய்வதும் நடந்து வருகிறது.

நிவர் புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே வெற்றி வேல் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இனி மீதமுள்ள மாவட்டங்களிலும் இதே காரணத்துக்காக யாத்திரை ரத்து செய்யப்படுகிறது.

டிசம்பர் 4 ஆம் தேதி அறுபடை வீடுகளில் வழிபாடு மட்டும் நடத்திவிட்டு, டிசம்பர் 5 ஆம் தேதி வேல் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெறும்.இந்த நிலையில் புயல் நிவாரண பணிகளில் பாஜகவினர் ஈடுபடுவர் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டிசம்பர் 5 ல் திருச்செந்தூரில் நடைபெறும் வெற்றிவேல் யாத்திரையின் நிறைவு விழாவிற்காக ,தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாஜக வினர் சுவர் விளம்பரம், சுவரொட்டி, பேனர் என விளம்பர படுத்தும் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகராட்சி வி.வி.டி சிக்னல் பகுதியில் பாஜகவினரால் வைக்கப்பட்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது, அதனை நேற்று ( 28.11.2020)  இரவு சுமார் 7 மணி அளவில், மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவின் பேரில் ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.தகவல் அறிந்து வந்த பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையிலான பாஜக வினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் இன்று வேல்யாத்திரை தொடர்பாக சிறப்பு ஆலோசனை கூட்டத்திற்கு வருகைதந்த  மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் அவர்கள் காலை மாநகராட்சி ஆணையரை சந்தித்துள்ளார். 


அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:  திருச்செந்தூரில் வெற்றிவேல் யாத்திரை ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான விளம்பர பேனர்கள் வைக்கபட்டுள்ளது.அந்த பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.ஏன் என கேட்டபோது அனைத்து கட்சி சார்ந்த பேனர் பொது சேவை அமைப்புகளின் பேனர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பேனர்கள் அனைத்தையும் அகற்றியுள்ளோம். நாங்கள் ஒருதலை பட்சமாக செயல்படவில்லை என ஆணையர் ஜெயசீலன் தெரிவித்ததாகவும் கூறினார்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் தான் வேல் யாத்திரை விழா நடைபெருகிறது. அதற்காக தான் இங்கே  ஆங்காங்கே பேனர்கள் வைத்துள்ளனர். இதற்கான ஒத்துழைப்பை தர வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ஜெயசீலனிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார். உடன் தூத்துக்குடி  வணிகர் பிரிவு மாநில தலைவர் A.Nராஜா கண்ணன், மகளிர் அணி மாநில பொது செயலாளர் நெல்லையம்மாள், தெற்கு மாவட்ட தலைவர்  பால்ராஜ், மற்றும் மாவட்ட,மண்டல தலைவர்கள் என பலர் உடனிருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல்

ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதிக்க முடியாது" - மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்..!!

  • Share on