முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாட்டு போட்டு வாள் வைத்து ஆடியதோடு அதனை செல்போனில் ஒளிப்பதிவு செய்து வாட்ஸ்அப்பில் பரப்பியவர் கைது.
பாட்டு போட்டு வாள் வைத்து ஆடி, அதனை செல்போனில் ஒளிப்பதிவு செய்து வாட்ஸ் அப்பில் பரவுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு சம்பந்தப்பட்டவர் யார் என்பதை கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் தர்மதுரை (22) என்பவர் நேற்று (08.08.2021) வசவப்பபுரம் பசும்பொன்நகர் அருகே செல்லியம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாள் வைத்து பாட்டு போட்டு ஆடியதுடன் அதனை செல்போனில் ஒளிப்பதிவு செய்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து தர்மதுரையை கைது செய்து அவரிடமிருந்த வாளையும் பறிமுதல் செய்தார்.