• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதி!

  • Share on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் பட்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆடி அமாவாசையான நேற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும், கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை 6 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளின் படி கடலில் புனித நீராடவும் நாழி கிணறு தீர்த்தத்தில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  • Share on

இருதரப்பினரிடையே மோதல் - 4 பேர் கைது!

கையில் வாளோடு ஆட்டம் போட்டு வாட்ஸ்அப்பில் வீடியோ பரப்பியவர் கைது!

  • Share on