தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஜெகவீரபாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தா சீனிவாசன் மாற்றப்பட்டு புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஜெகவீரபாண்டியன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் அவர், இராமநாதபுரம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்துள்ளார். மேலும், திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றியவர்.
பணியாற்றிய இடங்களில் பத்திரிகையாளர்களிடம் சுமூகமான நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு செயலாற்றியுள்ளார். மேலும், ராஜபாளையம், வில்லிவாக்கம் போன்ற சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.சுப்பு-வின் மகன் ஜெகவீரபாண்டியன் என்பதும், இவர் ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.