தூத்துக்குடியில் குடிநீர் என நினைத்து பாட்டிலில் இருந்த ஆசிட்டை குடித்த மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அந்தோணியார் புரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் மகன் இசக்கி செல்வம் (25). இவர் ஜிசி ரோட்டில் உள்ள ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த 24ம் தேதி பாட்டிலில் ஆசிட் இருந்ததை கவனிக்காமல் குடிநீர் என நினைத்து கவனக்குறைவாக குடித்துள்ளார்.
இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.