மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழகத்தில் தேர்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான தூத்துக்குடி மாநகராட்சியில் கோடிக்கணக்கான நடைபெற்றும் பணிகளின் இடங்களில் எந்தவொரு திட்ட மதிப்பீட்டு அறிவிப்பு பலகை வைக்கப்படால் இருப்பதாக பாஜக புகார் தெரித்துள்ளது. மேலும் உடனடியாக திட்ட மதிப்பீட்டு அறிவிப்பு பலகையை பணிகள் நடைபெறும் இடங்களில் வைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அதில், தூத்துக்குடி யில் நடைபெற்று வரும் ஸ்மாட் சிட்டி பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. தரமான பொருட்களை பணிகளுக்கு பயன்படுத்தவில்லை என பொது மக்களிடம் இருந்து புகார் வருகிறது. மழைநீர் கால்வாயானது சில தனிநபர் தேவைகளுக்காக செல்ல வேண்டிய வழித்தடத்தில் செல்லாமல் வளைந்து நெளிந்து பொதுமக்களுக்கு இடையூறாக செல்கிறது. மேலும், மாநகராட்சியில் கோடிக்கணக்கான மதிப்பீட்டில் நடைபெறக்கூடிய இத்தகைய ஸ்மாட் சிட்டி பணிகளின் இடங்களில் அரசு விதிகளின் படி எந்தவொரு திட்ட மதிப்பீட்டு அறிவிப்பு பலகை வைக்கப்படால் உள்ளது. எனவே அதனை உடனடியாக வைக்க வேண்டும். இது தொடர்பாக பாஜக செயற்குழு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.